×

மத்தியபிரதேசத்தில் வெற்றி பெற்றால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி


போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல், ஆளும் பாஜவும் ஆட்சியை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், மத்திய பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத் பிரசாரத்தை, தசரா பண்டிகை வாழ்த்துக்களுடன் எக்ஸ் தளம் வாயிலாக தொடங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘இந்த புனித பண்டிகையான விஜயதசமியில், மத்தியபிரதேச மக்களுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் நம்பிக்கை மற்றும் கலாசாரத்தை உயர்த்த எந்த எல்லைக்கும் செல்வோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் உள்ள இலங்கையில் சீதை கோயில் கட்டும் திட்டம் தொடங்கப்படும்.
மேலும் கோயில் அர்ச்சகர்களின் உதவித்தொகை உயர்வு, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கோயில் சொத்துகள் பராமரிப்பு” ஆகியவை மேற்கொள்ளப்படும். மோ நகரில் அம்பேத்கர் நினைவு சின்னம் அமைக்கப்படும்’ என்றார்.

The post மத்தியபிரதேசத்தில் வெற்றி பெற்றால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Lanka ,Congress ,Bhopal ,Sith ,Sri Lanka ,Telangana ,
× RELATED மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும்...