×

கொத்தவரங்கா கார குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 10-12
கொத்தவரங்காய் – 15
சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கொத்தவரங்காயை இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.பின்பு புளியை 1 கப் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு சின்ன வெங்காயம் மற்றும் கொத்தவரங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின் அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து புளிச்சாற்றினை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொத்தவரங்காய் கார குழம்பு தயார்.

The post கொத்தவரங்கா கார குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...