×

டிஏபி உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு

டெல்லி: டிஏபி உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அக்.1 முதல் அடுத்தாண்டு மார்ச் 31 வரையிலான ராபி பருவ கால பயிர்களுக்கான உர மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், டிஏபி உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். டிஏபி உரம் உலகளவில் உயர்ந்த போதிலும் விவசாயிகளுக்கு மூட்டை ரூ.1,350 என்ற விலையில் தொடர்ந்து கிடைக்கும்.

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.பி.கே. உர மூட்டையும் ரூ.1,470 என்ற விலையில் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் நைட்ரேட் உரம் கிலோவுக்கு ரூ.47.2, பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ.20.82, பொட்டாசியம் கிலோவுக்கு ரூ.2.38 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஏ.பி. உரத்துக்கு டன்னுக்கு ரூ.4,500 மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

The post டிஏபி உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DAP ,Union Minister ,Anurag Thakur ,Delhi ,Dinakaran ,
× RELATED அதிக விளைச்சல் பெற்றிட பயறு வகைகளில்...