×

மெக்சிகோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மெக்சிகோவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுவினர், அப்பாவி மக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துதல் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்நிலையில் மெக்சிகோவின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள அகாபுல்கோ-ஜிஹுவாடனெஜோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர். ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

The post மெக்சிகோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : in ,Mexico ,Mexico City ,
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது