×

தொடர் விடுமுறையையொட்டி டாப்சிலிப், கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*4 நாட்களில் 20 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி : தொடர் விடுமுறையையொட்டி டாப்சிலிப், கவியருவிக்கு 4 நாட்களில் 20 ஆயிரம் குவிந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருவோர் அடந்த வனப்பகுதியை சுற்றி பார்ப்பதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி முதல் தொடர் விடுமுறையால், டாப்சிலிப்பை சுற்றி பார்க்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். அதில் சிலர், அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி செல்வதை தொடர்ந்தனர். மேலும், வனத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு சென்றும் மகிழ்ந்தனர்.

விடுமுறை நாட்களில் டாப்சிலிப் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் பலரும், டாப்சிலிப்பில் உள்ள திறந்தவெளியாக இயற்கை காட்சியாக உள்ள புல்வெளியில் வெகுநேரம் நேரம் கழித்தனர். இப்படி கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், யானை சவாரி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர். அதேபோல பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மேலும், ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். தற்போது மழை குறைந்தும் தண்ணீர் வத்தும் சற்று குறைவால், அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். இதில் நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை, நேற்று ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இப்படி கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் விதிமீறி வனத்திற்குள் செல்கின்றார்களா? என்று வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அதுபோல், தொடர் விடுமுறையையொட்டி கடந்த 21ம் தேதி முதல், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆழியாருக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றை சுற்றி பார்த்த்து ரசித்ததுடன், அணையின் விடப்படும் படகு சவாரியில் பலர், சவாரி செய்து மகிழ்ந்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் வந்திருந்ததால், வாகனங்கள் நிறுத்தும் பகுதி பரபரப்புடன் இருந்தது. விடுமுறை நாட்களான கடந்த 4 நாட்களில், ஆழியாருக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறையையொட்டி டாப்சிலிப், கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Tapsilip ,Kaviaruvi ,Pollachi ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...