×

கிணற்றில் ஆசிட், ரப்பர் பால் கலப்பு

அருமனை : காரோடு கோட்டையத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி தெரசம்மாள். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கணவன் இறந்த பின் முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். வறுமை காரணமாக காரோடு கத்தோலிக்க சர்ச்சில் இயங்கி வரும் வின்சென்ட் தே பவுல் என்ற சபை இலவசமாக குடிநீர்க் கிணறு அமைத்து கொடுத்தது.

தெரசம்மா நேற்று கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்துள்ளார். அப்போது தண்ணீர் வெள்ளை நிறத்தில் இருந்ததோடு ஆசிட் மற்றும் ரப்பர் பால் வாசம் வந்தது. இதுகுறித்து தெரசம்மா அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

The post கிணற்றில் ஆசிட், ரப்பர் பால் கலப்பு appeared first on Dinakaran.

Tags : Kotdayathuvilai ,Karadu ,Teresammal ,Dinakaran ,
× RELATED கோஷ்டி மோதலில் 2பேருக்கு கத்திக்குத்து