×
Saravana Stores

தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்..!!

தஞ்சை: தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம் நடைபெற்றது. உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. சதயவிழாவையொட்டி தஞ்சை மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தமிழ் முறைப்படி திருமுறை பாடல்கள் பாடியப்படி ஓதுவார்கள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தனர். ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தேவார திருமுறை பாடல்கள் பாடி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேக நிகழ்வு நடைபெற்று வருகிறது. விபூதி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பேரபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்படும். 48 பேரபிஷேகம் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட தூரம் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்றைய தினம் ராஜராஜ சோழனின் புகழை போற்றும் வகையில் அவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருவுடையார் சிலை முன்பாக ராஜராஜ சோழன் சிலை வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்திருப்பதால் தஞ்சாவூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் சதய விழாவை காண குவிந்து வருகின்றனர்.

The post தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்..!! appeared first on Dinakaran.

Tags : Perabhishekam ,Peruvudaiyar ,1038th Sadaya Festival of Rajaraja Chola ,Thanjavur ,Tanjore ,Rajaraja Chola ,Perabhishekam for Peruvudaiyar ,1038th Sadaya Festival ,
× RELATED தஞ்சையில் 1038வது சதய விழா கோலாகலம்...