×

56 எரிகற்களை ஆய்வு செய்த கடலூர் மாணவர்: நாசாவின் சான்றிதழ் பெற்ற மாணவருக்கு குவியும் பாராட்டு

கடலூர்: கடலூர் வெள்ளி கடற்கரையில் விண்ணில் இருந்து விழுந்த எரிகற்களை ஆய்வு செய்து நாசாவின் சர்வதேச விண் ஆய்வாளர் சான்று பெற்றுள்ள 8-ம் வகுப்பு மாணவன் அனேஷ்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். கடலூர் அண்ணாநகரில் வசிக்கும் மாணவர் அனேஷ்வர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடலூர் வெள்ளி கடற்கரையில் விண்ணில் இருந்து விழுந்த 56 எரிகற்களை ஆய்வு செய்து நாசாவின் சர்வதேச விண் ஆய்வாளர் சான்றிதழை பெற்றுள்ளார். இதற்காக சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் மற்றும் நாசாவுடன் இணைந்து மாணவர் அனேஷ்வருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அத்துடன் 7 விண் கற்களையும் கண்டுபிடித்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கார்டின் சிமெண்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார்.

மேலும் அனேஷ்வர் யூடியூபில் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களிடம் விண்வெளி ஆய்வு குறித்து ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறார். எதிர்காலத்தில் கடலூரில் இருந்து ராக்கெட் ஏவ வேண்டும். மின் சட்டலைட் உருவாக்கி விண்ணில் செலுத்த வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று அனேஷ்வர் கூறியிருக்கிறார். மாணவர் அனேஷ்வரை கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் நேரில் அழைத்து பாராட்டினர். மேலும், மாணவனை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விண் ஆய்வாளர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post 56 எரிகற்களை ஆய்வு செய்த கடலூர் மாணவர்: நாசாவின் சான்றிதழ் பெற்ற மாணவருக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,NASA ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்...