×

இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்..உலக அளவில் சென்னைக்கு 127வது இடம்!!

சென்னை : இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நம்பியோ என்ற தனியார் நிறுவனம், பிபிசி, தி டெலிக்ராப், தி ஏஜ், சைனா டெய்லி, தி வாஷிங்டன் போஸ்ட், USA டுடே உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உலகின் முக்கிய நகரங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை 127வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மற்ற இந்திய நகரங்களான மும்பை 161வது இடத்திலும் கொல்கத்தா 174வது இடத்திலும் டெல்லி 263வது இடத்திலும் உள்ளன. ஏற்கனவே அப்தார் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சென்னை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்..உலக அளவில் சென்னைக்கு 127வது இடம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Serbia ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...