×

பழநி நகராட்சியில் 65 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

பழநி, அக். 25:பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 256 தெருக்கள் உள்ளன. நகராட்சியில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 70 ஆயிரத்து 456 ஆகும். சுகாதாரப்பணிகளுக்காக பழநி நகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 1 தூய்மை பணி ஆய்வாளர், இரு தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் வீதம் 6 பிரிவுகளுக்கு 139 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கும் 105 தனியார் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களும் என சுமார் 244 தூய்மை பணியாளர்களைக் கொண்டு நகரில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை காலங்களில் வெளியிலிருந்து வரும் வாழை மரம், மா இழை மற்றும் பூஜைகளுக்காக மக்கள் சுத்தம் செய்து போடும் குப்பைகள் என நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக நேற்று சுமார் 65 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகின்றன. இனிவரும் காலங்களில் குப்பைகளை வெளியே கொட்டாமல், குப்பை தொட்டிகளில் மட்டும் கொட்ட வேண்டுமென்றும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.மனோஜ்குமார் எச்சரித்துள்ளார்.

The post பழநி நகராட்சியில் 65 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Nagar ,Palani Municipality ,Dinakaran ,
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...