×

கோவையில் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

 

கோவை, அக். 25: கோவையில் வழக்கம்போல் ஆம்னி பஸ்கள் இயங்கியதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் தொடர்பாக மாநிலம் முழுவதும் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறைப்பிடித்த பேருந்துகளை விடுவிக்கக்கோரியும் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பேருந்து பயணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையில், பேருந்து உரிமையாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பின்னர், ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

அதன்படி, கோவையில் இருந்து வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், ‘கோவையில் இருந்து சென்னை, பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை அனைத்தும் இயக்கப்படுகின்றன. இதே போல் வெளியூரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை’ என்றனர்.

The post கோவையில் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின appeared first on Dinakaran.

Tags : Omni buses ,Coimbatore ,Omni ,Ayudha Puja ,Saraswati ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...