×

மதுரை நகர் சாலைகளில் மண்ணை சுத்தம் செய்ய நவீன இயந்திரம்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்

 

மதுரை, அக். 25: மதுரை மாநகரில் உள்ள சாலை ஓரங்கள், பாலங்கள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் சேரும் மணல்களை சுத்தம் செய்வதற்காக பெரிய ரக மண் கூட்டும் நவீன இயந்திரம் தூய்மை பாரத இயக்கம் நிதியின் கீழ் ரூ.85.87 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது. இதனை நேற்று நேதாஜி ரோடு சந்திப்பில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.

தொடர்ந்து மத்திய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வைத்தியநாதபுரம் கிழக்கு தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு போர்வெல் மற்றும் சர்வோதயா கிழக்கு தெரு கங்காணி லைன் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலெக்டர் சங்கீதா, கமிஷனர் மதுபாலன், துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவிப்பொறியாளர் ரிச்சார்டு, சுகாதார அலுவலர் வீரன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், மகாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரை நகர் சாலைகளில் மண்ணை சுத்தம் செய்ய நவீன இயந்திரம்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,PDR Palanivel Thiagarajan ,Madurai Nagar ,Madurai ,Madurai Municipality ,Minister PDR Palanivel Thiagarajan ,Dinakaran ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை...