×

அழகர்கோவில், திருப்பரங்குன்றம் கோயில்களில் அம்பு விடும் நிகழ்ச்சி

அழகர்கோவில்/ திருப்பரங்குன்றம், அக். 25: அழகர்கோவிலில் நவராத்திரி விழா கடந்த அக்.15ம் தேதி துவங்கி நடந்து வந்தது. விழாவின் 10ம் நாளான விஜயதசமியையொட்டி நேற்று மாலையில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுந்தரராஜ பெருமாள் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோட்டை வாசல் அருகிலுள்ள அம்பு விடும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுந்தரராஜ பெருமாள் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தக்காளர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமாசி மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா கடந்த அக்.15ம் தேதி துவங்கியது.

நிறைவு நாளான நேற்று அம்பு விடும் விழா பசுமலையில் உள்ள அம்பு விடும் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி இரவு மண்டபத்திற்கு வந்தார். தொடர்ந்து அம்பு விடும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post அழகர்கோவில், திருப்பரங்குன்றம் கோயில்களில் அம்பு விடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Alaghar temple ,Tiruparangunram ,Navratri festival ,Alaghar ,
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்