×

தண்டனை கைதிகளின் புதுமுயற்சி காலாப்பட்டு சிறையில் பேக்கரி திறப்பு

புதுச்சேரி, அக். 25: காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் புது முயற்சியாக பேக்கரி திறந்து விற்பனை செய்து வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 350க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடாமல் இருக்க அங்கு பல்வேறு சீர்திருத்த முயற்சிகளை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கைதிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில் தொடர்ச்சியாக தற்போது 10 கைதிகளுக்கு அரபிந்தோ சொசைட்டி மூலம் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற கைதிகள் மூலம் சிறை வளாகத்தில் சிறிய பேக்கரி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் பிரட், பிஸ்கட், கப் கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பேக்கரி பொருட்கள் சிறையில் சமீபத்தில் திறந்த கேன்டீனில் விற்பனை செய்யப்படுகிறது. சிறை கைதிகள், வார்டன்கள் வாங்கி சாப்பிடலாம். வெளியே உள்ள மக்களுக்கு கைதிகள் தயாரிக்கும் பேக்கரி பொருட்கள் தேவையென்றால் சிறைத்துறை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைதிகள் நடத்தும் பேக்கரியை சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங் சாகர் திறந்து வைத்தார். இதில் தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன், அரபிந்தோ சொசைட்டி உறுப்பினர்கள் கவுசல்சர்மா, சீனுவாச மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தண்டனை கைதிகளின் புதுமுயற்சி காலாப்பட்டு சிறையில் பேக்கரி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kalapattu Jail ,Puducherry ,Kalapattu Central Jail ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...