×

9ம் வகுப்பு மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், அடுத்த குட்டிவெடிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கிரிஜா (13), ராமாபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் கிரிஜாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி, கடந்த 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, விஷம் குடித்து மயங்கினார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 9ம் வகுப்பு மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Kaveripatnam ,Kuttivedichampatti ,Girija ,Ramapuram Govt ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...