×

அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

க.பரமத்தி: க.பரமத்தி ஊராட்சி அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் ஊர் நன்மைக்காக நவராத்திரி நிறைவு விழா சிறப்பு வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி சந்தோஷ் நகரில் அஷ்டநாகேஸ்வரி அம்மன் சித்தர்பீட கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜைகளும் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. கடந்த 15ந்தேதி ஊர் கிராம மக்கள் நன்மைக்காக பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டதுடன் நவராத்திரி துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புபால் ஆகிய 18 வகையானப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது.

The post அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Navratri ,Ashtanakeshwari Amman Temple ,K. Paramathi ,Panchayat Ashtanakeswari Amman Temple ,K. Paramathi… ,Ashtanageshwari Goddess Temple ,
× RELATED பவித்திரம் காலனி பகுதியில் உள்ள...