×

குளித்தலையில் வீரமங்கை குயிலிக்கு வீரவணக்கம்

குளித்தலை: நவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று விஜயதசமி தினத்தன்று ஆங்கிலேயருக்கும், சிவகங்கை ராணி வேலு நாச்சியார் படைக்கும் இடையே போர் நடந்தது. இதில் பெண்கள் படை தளபதியான குயிலி தனது உடலில் நெய் ஊற்றி தீ வைத்து ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கியில் குதித்து இறந்தார். இதனால் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போரில் வேலு நாச்சியார் எளிதில் வெற்றி பெற்றதாக அரண்மனை கல்வெட்டு கூறுகிறது. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை காந்திசிலை முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் குயிலி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

The post குளித்தலையில் வீரமங்கை குயிலிக்கு வீரவணக்கம் appeared first on Dinakaran.

Tags : Veeramangai Quili ,Kulithalai ,Navratri festival ,Sivaganga Rani Velu Nachiar ,Vijayadashami day ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...