×

தொமுச கொடியேற்று விழா

அரூர்: அரூர் கச்சேரிமேடு ரவுண்டானவில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில், கொடியேற்று விழா நடந்தது. அரூர் நகர திமுக செயலாளரும், தனியார் மோட்டார் வாகன ஓட்டுனரும், தர்மபுரி மாவட்ட கவுரவ தலைவருமான முல்லை ரவி தொ.மு.சா கொடியை ஏற்றிவைத்து உறுப்பினர் அடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் பழனி கலந்துகொண்டு, ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளார்களுக்கு திமுக அரசு வழங்கும் சலுகைகளையும், ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். தனியார் வாகன ஓட்டுனர் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன், ஆனந்தன், முருகதாஸ், ராகுலன், ஆட்டோ சங்க கிளை தலைவர் விமல்ராஜ், கலைவாணன், வேலு, அரவிந்தன், ஞானபிரகாசம், சேவிக், ஆனஸ்ட்ராஜ், ராஜா, ஆனந்தன், சீனிவாசன, குமார், பாலு, சாந்தப்பன், ராஜாவேல், ராஜா குழந்தை, அருணாசலம், காளிமுத்து, சார்லஸ் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சாந்தப்பன் நன்றி கூறினார்.

The post தொமுச கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Thomas ,flag ,Aroor ,Auto Workers' Union ,Aruro ,DMK ,Arur ,Thomusa ,-off ,
× RELATED அனுப்பர்பாளையம் பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு