×

உஷாரய்யா உஷாரு… தள்ளுபடி தர்றதா ஆன்லைனில் வரும் லிங்க்கை டச் பண்ணிடாதீங்க : போலீஸ் எச்சரிக்கை

சென்னை: பண்டிகை தினங்களையொட்டி தள்ளுபடி என்ற பெயரில் ஆன்லைனில் வலம் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய சமூகவலைத்தளங்களை ஒரு முக்கிய பிளாட்பார்மாக கருதுகிறது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் மிகப்பெரிய நகைக்கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள் பெயரில் சில மர்ம நபர்களால் ஆஃபர் என்ற போர்வையில் அனைவரது கைப்பேசிகளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் மோசடிகளை மேற்கொண்டு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த 2 நாளாக பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்தின் 36வது ஆண்டுவிழாவையொட்டி சிறப்பு பரிசு தருவதாக லிங்க்-குகள் அனைவரது செல்போனிலும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த மோசடி பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர்மநபர்களால் ஆஃபர் தருவதாக கூறி லிங்க் அனுப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு பண மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால், இதுபோன்ற குறுஞ்செய்திகள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளுக்கு வந்தால் அதனை உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனவும், அதனை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உஷாரய்யா உஷாரு… தள்ளுபடி தர்றதா ஆன்லைனில் வரும் லிங்க்கை டச் பண்ணிடாதீங்க : போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Usharaiya Usharu ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்