×

திருவில்லிபுத்தூர் அருகே துபாயில் வேலை பார்ப்பவர் வீட்டில் பணம் கொள்ளை

திருவில்லிபுத்தூர், அக்.25: திருவில்லிபுத்தூர் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒத்தப்பட்டி காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி(47). துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லை. அருகில் உள்ள சகோதரி பார்வதி வீட்டை பார்த்துக் கொண்டுள்ளார்.நேற்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரி பார்வதி தனது சகோதரர் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்தார்.

இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த நகர் போலீசார் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து சென்றனர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் வீட்டில் பணம் கொள்ளையடிக்கபட்டது ஒத்தப்பட்டி காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவில்லிபுத்தூர் அருகே துபாயில் வேலை பார்ப்பவர் வீட்டில் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Dubai ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி