×

ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மழலையர் கல்வி தொடக்கம்

திருவள்ளூர்: விஜயதசமியை முன்னிட்டு திருவள்ளூர் பள்ளியில் மழலையர் கல்வி தொடங்கப்பட்டது. திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு, பள்ளி தாளாளர் ப.விஷ்ணுச்சரண் உத்தரவின் பேரில் மழலையர்களுக்கான கல்வி தொடக்க நாள் விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் பரணிதரன் இதில் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமையாசிரியர்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மழலையர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் ஆசிரியர்கள் தங்களது மடியில் மழலையர்களை அமர வைத்து கையை பிடித்துக் கொண்டு மஞ்சள் கொம்பினால், பச்சரிசியில் “ஓம்” என்ற எழுத்தின் மூலமாகவும், தமிழ் மொழியின் உயிர் எழுத்தான “அ” என்ற தாய் மொழியின் மூலமாகவும் எழுத்துப் பயிற்சியினை கற்றுக் கொடுக்க தமது இனிமையான கல்விப் பயணத்தை குழந்தைகள் தொடங்கினர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு மழலையர்களை வாழ்த்தினர்.

The post ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மழலையர் கல்வி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sri Niketan School ,Tiruvallur ,Vijayadashami ,Sri Niketan Matric Higher Secondary School ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...