×

ஆக்சிஜன் உற்பத்தி பெருவிழாவையொட்டி சிறுகளத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி

குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நல்ல காற்றை உற்பத்தி செய்யவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஆக்சிஜன் உற்பத்தி பெருவிழா நிகழ்ச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு திடலில் நேற்று நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, சிறுகளத்தூர் ஊராட்சி மன்றம் மற்றும் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் இணைந்து, சிறுகளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அம்பேத்கர் விளையாட்டு திடல் ஆகிய பகுதிகளில் நாவல், அரசு, ஆல், அத்தி உள்ளிட்ட அரிய மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ – மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களது கரங்களால் மரங்களை நட்டு மகிழ்ந்தனர்.

இதுவரை, மொத்தம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதல் தவணையாக நேற்று மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்வகை அரிய மற்றும் பெரிய மரங்களை நடுவதன் மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்று கிடைப்பதுடன், மண் வளம், நீர் வளம், இயற்கை வளம் பாதுகாக்கப்படும் என்று பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் தெரிவித்தனர். அப்போது, ‘ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன், மரக்கன்றுகள் நடும் பணி ஒவ்வொரு வாரமும் நடைபெறும்’ என்றார்.

The post ஆக்சிஜன் உற்பத்தி பெருவிழாவையொட்டி சிறுகளத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Tags : Sirukalathur Panchayat ,Oxygen Production Festival ,Kunradthur ,Kanchipuram district ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு