×

‘‘நான் சிறையில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன்’’: சந்திரபாபு நாயுடு கடிதம்

ஐதராபாத்: ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:
நான் சிறையில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன். எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்திவிட முடியாது. நான் இப்போது மக்களிடையே இல்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் எல்லா இடங்களிலும் என் பெயர் உள்ளது. நான் எப்போதுமே மக்களுக்காக உழைத்து வந்துள்ளேன்.

எனது முதல் கவனம் மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை நோக்கிதான் இருக்கிறது. நான் மாநிலத்தில் இல்லாதபோது மனைவி புவனேஸ்வரி என் சார்பில் செயல்படுவார். அவர் மக்களோடு தொடர்பில் இருப்பார். கால அவகாசம் எடுத்தாலும் நான் மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் உழைக்க புதிய வீரியத்துடன் வெளியே வருவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தன்னை சிறையில் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் சந்திரபாபு நாயுடு இந்த கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது

The post ‘‘நான் சிறையில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன்’’: சந்திரபாபு நாயுடு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Hyderabad ,Former ,Chief Minister ,Andhra State ,Telugu Desam Party ,
× RELATED கூட்டணிகளுக்கு 60 தொகுதிகள் தரமுடிவு...