×

இஸ்ரேல் – பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு ‘பயங்கரவாதம் பொது எதிரி’: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

இஸ்ரேல்: இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் இருபுறமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காசா மருத்துவமனை மீதான தாக்குதல், மேலும் அப்பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான இஸ்ரேல் விதித்த தடை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக உலக தலைவர்கள் இஸ்ரேலிடம், காசா மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவார்கள் என திர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித தடையும் இருக்க கூடாது எனவும் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல நாட்டின் அதிபர்களும் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு சென்றார். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.

“இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு ‘பயங்கரவாதம் பொது எதிரி”, இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும், ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டனர் எனவே ஹமாஸ் எங்களுக்கும் எதிரி” என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியுள்ளார்.

The post இஸ்ரேல் – பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு ‘பயங்கரவாதம் பொது எதிரி’: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் appeared first on Dinakaran.

Tags : Israel ,France ,Chancellor ,Emmanuel Macron ,Dinakaran ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...