×

அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவ.4ம் தேதி நடைபெறும்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அமமுக தலைவர் சி.கோபால் தலைமையில் நவம்பர் 4 காலை 10 மணிக்கு திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஜெயலலிதாவின் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு உறுப்பிணர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவ.4ம் தேதி நடைபெறும்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AAMUK ,Trichy ,TTV Dinakaran ,CHENNAI ,working committee ,general secretary ,T.D.V. Dhinakaran ,DTV Dinakaran ,Dinakaran ,
× RELATED யூனிட்டுக்கு கூடுதல் வசூல் முடிவை கைவிட டிடிவி.தினகரன் வலியுறுத்தல்