×

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்

டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் பிரான்ஸ் அதிபரும் சென்றுள்ளார். காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் இருபுறமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காசா மருத்துவமனை மீதான தாக்குதல், மேலும் அப்பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான இஸ்ரேல் விதித்த தடை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக உலக தலைவர்கள் இஸ்ரேலிடம், காசா மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவார்கள் என திர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித தடையும் இருக்க கூடாது எனவும் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல நாட்டின் அதிபர்களும் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் பிரான்ஸ் அதிபரும் சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் appeared first on Dinakaran.

Tags : President ,Emmanuel Macron ,Israel ,Tel Aviv ,US ,Britain ,French ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை