×

ஆம்னி பஸ்கள் இன்று இயங்குமா? இயங்காதா? ஆம்னி பேருந்து சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த தருணத்தை பயன்படுத்தி சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுண்டு. இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பிற்பகல் 3 மணிக்குள் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆம்னி பஸ்கள் இன்று இயங்குமா? இயங்காதா? ஆம்னி பேருந்து சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Omni ,Government of Tamil Nadu ,Omni Bus Associations ,Chennai ,Tamil Nadu ,Ayudhpuja ,Vijayatasamy ,
× RELATED செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து