×

தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்: கர்நாடகா கல்வித்துறை அமைச்சர்

பெங்களூரு: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். ர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம். அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறினார்.

கர்நாடகாவில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. கடந்தாண்டு ஜனவரியில் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குச் செல்ல தொடங்கினர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.

கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இறுதியில் மாணவிகள் உரிய சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. இதனை அடுத்து தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவிகள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர் சுதாகர்; ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்” என்று அவர் தெரிவித்தார்.

The post தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்: கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Minister of Education ,Karnataka ,Bengaluru ,Karnataka Education Department ,Karnataka Education ,Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை போல் கர்நாடக...