×

கூற்றநாட்டில் பேராசிரியர், மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

 

பாலக்காடு, அக்.23: பாலக்காடு மாவட்டம் கூற்றநாட்டிலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து மூலமாக நேற்று முன்தினம் நெல்லியாம்பதிக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு வரும் வழியில் மாணவர்களை அவரவர் வீடுகளில் கல்லூரி நிர்வாகிகள் இறக்கி விட்டனர். அப்போது மாணவிகளிடம் 2 வாலிபர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதனை தட்டிக்கேட்ட பேராசிரியர், மாணவர்கள் மற்றும் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளையும் அந்த வாலிபர்கள் அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து அவர்கள் தலைமறைவானர்.

இது குறித்து சாலிசேரி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர். படங்கள், சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்டது திருமிற்றங்கோட்டை அடுத்த பள்ளத்தைச் சேர்ந்த ஜாபிர் (29), ஜூபைர் (24), ராகுல் (22), இரும்பகச்சேரியைச் சேர்ந்த ஜூனைத் (23), குனம்முச்சியைச் சேர்ந்த அபு (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாலிச்சேரி போலீசார் இரவு நேரங்கிளல் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post கூற்றநாட்டில் பேராசிரியர், மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kurannat ,Nelliampathy ,
× RELATED பாலக்காடு நகராட்சி 6வது வார்டில்...