×

கமுதி கோயிலில் அன்ன குவியல் மகேஸ்வர பூஜை

கமுதி, அக்.23: கமுதி ராமானுஜ பஜனைமடம் சார்பில், காமாட்சியம்மன் கோயிலில் புரட்டாசி 5ம் வார சனிக்கிழமையை முன்னிட்டு மகேஸ்வர பூஜை நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமை மட்டும் வந்ததால், நேற்று முன்தினம் 5ம் சனிக்கிழமையாக கருத்தில் கொண்டு இந்த மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

108வது ஆண்டாக நடந்த இந்த மகேஸ்வர பூஜையில், ஆன்மீக துறவிகள் உள்ளிட்டோருக்கு, பொதுமக்களிடம் சேகரித்த கைப்பிடி அரிசியில் ஒரு நாள் முழுவதும் அன்ன தானம் வழங்கப்பட்டது. முன்னதாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன குவியலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கமுதி கோயிலில் அன்ன குவியல் மகேஸ்வர பூஜை appeared first on Dinakaran.

Tags : Anna Kuyal Maheswara Pooja ,Kamudi Temple ,Kamudi ,Maheshwara ,Puja ,Kamudi Ramanuja Bhajanaimadam ,Kamatshiyamman Temple ,Puratasi ,Anna Kuvial ,Maheshwara Puja ,
× RELATED 115 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை