×

ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு தளவாடங்கள் வாங்க நிதியுதவி

 

தேனி, அக். 23: இந்தியஅளவில் 48 கிளைகளுடன் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தேனியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் 4 ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அனுப்பப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, உத்தமபாளையம், பிடிஆர் காலனிஅரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, போடி தருமத்துப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு தளவாட சாமான்கள் வாங்க நிதி உதவியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன், நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம், மக்கள்மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல்.முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வக்குமார், 29 வது வார்டு கவுன்சிலர் சந்திரகலாஈஸ்வரிபிரசன்னா, கணபதி சில்க்ஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணியன், சின்னத்திரை நடிகை மேனகாதேவி, வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவ உயிரி பொறியாளர் ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு தளவாடங்கள் வாங்க நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Union ,José Alucas ,Teni ,Jose Alucas Gold Jewelry Stores ,India ,Jose Alucas ,Dinakaran ,
× RELATED தேனியில் கிராமம் கிராமமாக சென்று...