×

3 இடங்களில் பாலம் அமைக்க கோரி மனு

 

சிவகாசி, அக் 23: சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 3 இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கவுன்சிலர் சாமுவேல் கோரிக்கை மனு கொடுத்தார். கவுன்சிலர் கொடுத்துள்ள மனுவில், திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 11வது வார்டு பகுதியில் பாண்டியன் நகர் 3வது தெரு, ரேஷன் கடை அருகில் 4 முக்கு சந்திப்பு பகுதிகளில் வாறுகால் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கின்றது.

மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகின்றது. இந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் வாறுகால் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாண்டியன் நகரில் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு ஆகிய 3 இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post 3 இடங்களில் பாலம் அமைக்க கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Corporation ,Thirutangal Mandal ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை