×

புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை

 

புழல், அக்.23: திருப்பூர் மகாலக்ஷ்மி நகரை சேர்ந்தவர் மீனாட்சி (எ) காந்திமதி(65). இவர், கடந்த 2014ம் ஆண்டு வேளச்சேரியில் தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி தேவியை கட்டி போட்டுவிட்டு 12 சவரன், ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

வெளியே வந்தவர் தலைமறைவாக இருந்தார். பின்னர், வேளச்சேரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணையில் இருந்தபோது இலவச சட்ட மையம் மூலமாக ஜாமீனுக்கு மனு செய்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவரது, உறவினர்கள் யாரும் உதவிக்கு வராததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குளியல் அறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. சக பெண் கைதிகள் இவரை பார்க்க சென்றபோது, அங்கு மீனாட்சி தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சிறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Meenakshi (A) Gandhimati ,Mahalakshmi Nagar, Tirupur ,Velachery ,
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...