×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் புது வகை இனிப்புகள் அறிமுகம்: பொதுமேலாளர் தகவல்

 

திருவள்ளூர், அக். 23: காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆவின் நிறுவனம் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெய் மைசூர்பா, நெய் லட்டு, காஜு கட்லி, பாதாம் அல்வா, கோவா, மில்க் கேக் ஆகிய சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இனிப்பு வகைகள் சுத்தமான ஆவின் நெய்யினால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தனியார் நிறுவன இனிப்பு வகைகளை ஒப்பிடும்போது ஆவின் இனிப்பு வகைகள் தரத்தில் உயர்ந்தவை மற்றும் விலையில் குறைந்தவை.

இந்த இனிப்பு வகைகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகம், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை முகவர்கள் மூலம் கிடைக்கும். மேலும் மொத்த ஆர்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். மேலும் இது குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: திருவள்ளூர் – 9894263351, காஞ்சிபுரம் – 9488731298, செங்கல்பட்டு – 9445695275. இவ்வாறு காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் ஜி.ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் புது வகை இனிப்புகள் அறிமுகம்: பொதுமேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aavin ,Diwali ,Tiruvallur ,Kanchipuram ,Thiruvallur ,Diwali festival 2023 ,Nei ,Mysore ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...