×

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொள்ளையர்களிடம் எஸ்பி விசாரணை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேற்றிரவு திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் முதன்முதலாக வந்தார். அப்போது எஸ்பி ஜெயக்குமார் காவல் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு கைதிகளை அடைத்து வைக்கும் அறையை சோதனை செய்தார். காவல் நிலையத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்த அவர் பழைய வழக்குகளில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார். மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களிடம் பல்வேறு சந்தேங்கள் குறித்து கேட்டார். அதன் பின்னர் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்து பின்னர் போலீசாரிடம் சிக்கிய 4 கொள்ளையர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்.

The post முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொள்ளையர்களிடம் எஸ்பி விசாரணை appeared first on Dinakaran.

Tags : SP ,Muthuppet police station ,Muthuppet ,Thiruvarur District ,Jayakumar ,Dinakaran ,
× RELATED சிவகங்கைக்கு புதிய எஸ்பி நியமனம்