×

போதை, மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிங் ஸ்டார் சமூக சேவை அமைப்பின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பேரணியில் அமைப்பின் நிறுவனர் சரவணன் தலைமை வகித்தார். திருபுவனம் சன்னதி தெருவில் இருந்து தொடங்கி கடைத்தெரு மற்றும் தேரோடும் 4 வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சன்னதி தெருவில் முடிவடைந்தது. பின்னர் அங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் அனைத்து மகளிர் அமைப்புகளை சேர்ந்த பெண்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பாரதியார் இளைஞர் நற்பணி மன்றம், திருபுவனம் மற்றும் ஆடுதுறை ரோட்டரி சமுதாயக் குழுமத்தினர், லியோ சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியும், மது போதையை கைவிடக் கோரி கோஷமிட்டபடி கலந்து கொண்டனர். அமைப்பின் தலைவர் கோபால் நன்றி கூறினார். தஞ்சாவூர் மஹாராஜா சில்க் & ரெடிமேட்ஸிற்கு வைரமுத்து வருகை

The post போதை, மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : RALLY AWARENESS ,Thiruvidaymarathur ,Alcohol Abolition Awareness Rally ,Thirubuwana ,Thiruvaymarathur ,King Star Community Service ,
× RELATED திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்...