×
Saravana Stores

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலி நாயனாருக்கு சிறப்பு வழிபாடு

செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. சோழமன்னர்களின் ஒருவரும், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட்சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சிறப்புலிநாயனார் அவதரித்த பூராட நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைமுன்னிட்டு, சிறப்புலிநாயனாருக்கு பால், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள்பொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இதேபோல் தான்தோன்றீஸ்வரர், வாள்நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலி நாயனாருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shalali Nayanar ,Akur Thanthonreeswarar Temple ,Sembanarkoil ,Tanthonreeswarar Temple ,Valnedungkanni Amman ,Aakur ,Chola ,Nayanmars ,Nayanar ,Akur Tanthonreeswarar temple ,
× RELATED தரங்கம்பாடியில் பழமை மாறாமல் ரூ.3.63...