×

ராஜஸ்தான் வேட்பாளர்கள் தேர்வு கெலாட்டின் சிறப்பு அதிகாரி சச்சின் பைலட்டுடன் சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சிறப்பு அதிகாரி சச்சின் பைலட்டை திடீரென சந்தித்து பேசினார். ராஜஸ்தான் சட்டபேரவைக்கு அடுத்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அசோக் கெலாட் அலுவலக சிறப்பு அதிகாரியான லோகேஷ் சர்மா சச்சின் பைலட்டை நேற்று சந்தித்து பேசினார்.

இது குறித்து லோகேஷ் கூறுகையில்,‘‘ பேரவை தேர்தல் குறித்து சச்சின் பைலட்டுடன் ஆலோசனை நடத்தினேன். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்’’ என்றார். கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல்வர் கெலாட்டுக்கு எதிராக பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் போர்க்கொடி தூக்கியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. முதல்வருக்கும் சச்சின் பைலட்டுக்கும் பல ஆண்டுகளாக இருந்து வந்த மோதல் விவகாரத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்தது. இந்நிலையில் முதல்வரின் சிறப்பு அதிகாரி பைலட்டை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராஜஸ்தான் வேட்பாளர்கள் தேர்வு கெலாட்டின் சிறப்பு அதிகாரி சச்சின் பைலட்டுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Sachin Pilot ,Kelat ,Rajasthan ,JAIPUR ,RAJASTHAN CHIEF ASHOK KELAT ,Rajasthan Legislature ,Gelatin ,Special ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...