×

மிசோரமில் 173 வேட்பு மனுக்கள் ஏற்பு

அய்ஸ்வால்: மிசோரம் பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 173 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இருதினங்களுக்கு(அக்.20) முன் முடிவடைந்தது.

இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி(எம்என்எஃப்) கட்சி சார்பில் 25 தற்போதைய எம்எல்ஏக்கள் உள்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(இசட்பிஎம்), காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜ 25, ஆம் ஆத்மி 4 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சுயேட்சையாக 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 16 பெண்கள் உள்பட மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் 174 மனுக்களில் 173 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோரம் மக்கள் இயக்கம் சார்பாக லாங்ட்லாய் கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த டாக்டர் லோரெய்ன் லால்பெக்லியன் சில்வாவின் மனு முரண்பாடுகள் காரணமாக பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மிசோரமில் 173 வேட்பு மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aizawl ,Mizoram assembly elections ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி