×

மகாராஷ்டிராவில் ரூ.150 கோடி போதைப்பொருள் சிக்கியது

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாருக்கு மகாராஷ்டிரா அவுரங்காபாத் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துநேற்று மகாராஷ்ட்ரா அவுரங்காபாத் மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சில வீடுகளில் சோதனையிட்டதில் கொக்கெய்ன், மெபெட்ரோன், கீட்டாமைன் ஆகிய போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை பதுக்கிய போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என்று தெரிய வந்தது.

The post மகாராஷ்டிராவில் ரூ.150 கோடி போதைப்பொருள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Ahmedabad ,Ahmedabad, Gujarat ,Aurangabad district ,Dinakaran ,
× RELATED அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது: இலங்கையை சேர்ந்தவர்கள்