×

பாஜவின் பி டீம் அதிமுகவா?: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்று தோற்றத்தை கடந்த காலத்தில் வேண்டுமென்றே உருவாக்கினர். பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக.

சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறு பிரச்னை கூட ஏற்படாமல் ஆட்சி நடத்தினோம். கொள்கை என்பது நிலையானது, கூட்டணி என்பது வேறு. அதிமுகவில் ஆண், பெண் என்ற இரண்டு ஜாதி தான். எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுடைய மதம் அவர்களுக்கு புனிதமானது. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. எல்லோரும் சுதந்திரமாக வாழவேண்டும். நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன், அனைத்து மதத்தையும் நேசிக்கக் கூடியவன், எந்த மதத்திற்கும் அதிமுக விரோதி கிடையாது.

இன்னும் அதிமுக பாஜகவின் பி டீமாக உள்ளது என்கின்றனர். அதிமுக எப்போதும் ஒரிஜினலாக தான் உள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் ஏழை மாணவர்கள் பயன் பெறுவதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் முழுவதும் 2160 பேர் மருத்துவம் படிக்கின்றனர். இது அதிமுகவின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவின் பி டீம் அதிமுகவா?: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : BAJA'S B TEAM ,ADAMUGAWA ,EDAPPADI PALANISAMI ,Salem ,Salem Seelanayakanupati ,Islamists ,H.E. General Secretary ,Edapadi Palanisami ,Bajvin B Team Aditmugawa ,
× RELATED சொல்லிட்டாங்க…