×

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல, நாளை அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு!

சென்னை: நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘நீட் நுழைவுத் தேர்வை’ ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், “நீட் விலக்கு, நம் இலக்கு!” ‘மாபெரும் மக்கள் கையெழுத்து இயக்கத்தை’ மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கமாக கொண்ட செல்ல கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் 23.10.2023 அன்று மாலை, காணொலி காட்சி வாயிலாக “தி.முக. அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

“நீட்” தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் “நீட் விலக்கு, நம் இலக்கு” எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், “தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல, நாளை அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : NEET Exemption Signature Movement ,Dima ,Chennai ,NEET Exemption ,People's Movement ,R. S. ,Bharati ,Signature ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் மொத்தமாக ஸ்வீப்...