×

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மையாக மாறிய சிறுமிகள்: பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

பெரம்பூர்: நவராத்திரியை முன்னிட்டு கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பெரம்பூர் பாரதி சாலையில் சரஸ்வதி கலா கேந்திரா நாட்டிய பள்ளியில் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் பொம்மைகளுக்கு பதிலாக கடவுள்களில் வேடம் அணிந்த சிறுமிகளை கொலுவில் நிறுத்தி வித்தியாசமான முறையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.

இதில் சரஸ்வதி, லட்சுமி, சக்தி துர்க்கை, மீனாட்சி, அபிராமி அங்காள பரமேஸ்வரி, பவானி உள்ளிட்ட 18 சுவாமிகளின் வேடங்கள் அணிந்த சிறுமிகள் தத்ரூபமாக பொம்மைகள் போன்று நின்று காட்சியளித்தனர். இதனை பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நேரில் வந்து கண்டு களித்தனர்.

பொதுமக்களிடம், நவராத்திரி தோன்றிய வரலாறை பறைசாற்றும் வகையிலும், இளைய தலைமுறைக்கு புதிய படைப்புக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் இது போன்ற வித்தியாசமான படைப்புகளை செய்து வருவதாகவும் அதனை மையமாக வைத்து இந்த ஆண்டு லைவ் கொலு கான்செப்ட் என்ற வகையில் சிறுமிகள் கடவுள்களின் வேடம் அணிந்து தத்துரவமாக காட்சியளித்ததாகவும் இந்த வருடம் நடைபெற்ற இந்த கான்செப்ட் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சரஸ்வதி கலா கேந்திரா நாட்டியப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிரண் மையி தெரிவித்தார்.

The post நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மையாக மாறிய சிறுமிகள்: பொதுமக்கள் கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Tags : Navratri ,Perampur ,Bharathi road ,Navratri Festival: The ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு