×

குட்கா விற்பனை 24,796 குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

சென்னை: கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 26,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24,796 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

குட்கா விற்பனை தொடர்பாக கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 26,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24,796 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,26,929 கிலோ குட்கா மற்றும் 453 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post குட்கா விற்பனை 24,796 குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Gutka ,DGB ,Shankar Jival ,Chennai ,TGB Shankar Jival ,
× RELATED குட்கா விற்பனை செய்த பேன்சி ஸ்டோருக்கு சீல்