×

டெல்லியை உலுக்கிய புதிய பயங்கரம் சுவிஸ் பெண்ணை கொடூரமாக கொன்ற வாலிபர்: காதல் செயலியால் நேர்ந்த சோகம், ரூ.2.10 கோடி பணத்துடன் சிக்கினான், காரில் சடலத்தை அடைத்து நகர்வலம்

புதுடெல்லி: காதல் செயலி மூலம் தேடி வந்த சுவிஸ் பெண்ணை டெல்லி காதல் கொடூரமாக கொன்றது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.2.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடூர கொலைகளால் மிரட்டப்படும் டெல்லியை உலுக்கக் கூடிய மற்றொரு புதியகொலை நடந்துள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கூடத்தின் அருகே நேற்று முன்தினம் இளம்பெண்ணின் அழுகிய சடலம் கிடைத்தது. வெளிநாட்டு பெண்ணை போல் இருந்ததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து அந்த பகுதியில் காரில் வந்தவரை போலீசார் தேடினர். அவர் பெயர் குர்பிரித் சிங் (30) என தெரிய வந்தது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவருடைய அறையில் கட்டுக்கட்டாக ரூ.2.10 கோடி பணமும் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘கொல்லப்பட்ட பெண் சுவிஸ்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பாக காதல் செயலி மூலமாக அறிமுகம் ஆனார். சமீபத்தில், என்னை பார்ப்பதற்காக டெல்லிக்கு வந்தார். என்னுடன் ஒன்றாக தங்கினார். 2 நாட்கள் கழிந்த நிலையில் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அதனால் கோபம் அடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டேன். பின்னர், அவருடைய சடலத்தை காரின் டிக்கியில் அடைத்து வைத்து , மாநகராட்சி பள்ளி கட்டிடம் அருகே வீசி விட்டு வந்து விட்டேன்,’ என கூறியுள்ளார். ஆனால், கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் நினா பெர்கர் என்பது தெரிய வந்தது. குர்பிரித் அளித்த தகவல்கள் முரண்பாடாக இருப்பதால், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 2.10 கோடி மர்மம்: குர்பிரித் சிங்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் ரூ.2.10 கோடி யாருடையது? எப்படி அவருக்கு அது கிடைத்தது என்பது மர்மமாக உள்ளது. அது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

The post டெல்லியை உலுக்கிய புதிய பயங்கரம் சுவிஸ் பெண்ணை கொடூரமாக கொன்ற வாலிபர்: காதல் செயலியால் நேர்ந்த சோகம், ரூ.2.10 கோடி பணத்துடன் சிக்கினான், காரில் சடலத்தை அடைத்து நகர்வலம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு