- மொய்த்ரா
- துபாய்
- இந்தியா
- பாஜக
- துபே
- புது தில்லி
- திரிணாமூல் காங்கிரஸ்
- மஹுவா மொய்த்ரா
- தர்ஷன் ஹிரானந்தனி
- அதானி குழு
- பாராளுமன்ற
- டியூப்
- தின மலர்
புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் தொட ர்ந்து கேள்வி கேட்டதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே சமீபத்தில் குற்றம்சாட்டினார். இது தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை நெறிமுறை குழு முன்பாக வரும் 26ம் தேதிக்குள் மொய்த்ரா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜ எம்பி நிஷிகாந்த் துபே நேற்று தனது டிவிட்டரில், ‘‘எம்பி ஒருவர் கொஞ்சம் பணத்திற்கான நாட்டையே அடகு வைத்துள்ளார். அவர் இந்தியாவில் இருந்த போது, அவரது நாடாளுமன்ற லாகின் ஐடி துபாயில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய தகவல் மையம் (என்ஐசி) விசாரணை அமைப்புகளிடம் தந்துள்ளது. இனியும் இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டுமா? இதில் மக்கள் முடிவெடுப்பார்கள்’’ என்றார்.
* அதானி தான் பணம் தர முயன்றார்: மஹுவா
பா.ஜ எம்பி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள எம்பி மஹுவா மொய்த்ரா, ‘‘எம்பிக்களின் நாடாளுமன்ற லாகின் ஐடிகள் உதவியாளர்கள் மூலம் இயக்கப்பட்ட போது, அவர்கள் எங்கிருந்தார்கள் என்கிற தகவலை தேசிய தகவல் மையம் பொதுவெளியில் வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதை போலி டிகிரிவாலாக்கள் மூலம் கசிய விட வேண்டாம். நான் 6 மாதம் கேள்வி கேட்காமல் அமைதி காக்க வேண்டுமென்ற அதானியின் வலியுறுத்தலை நிராகரித்தேன்.
கேள்வி கேட்காமல் இருக்க பணம் தர முயன்ற அதானி இப்போது கேள்வி கேட்க பணம் பெற்றதாக பொய் குற்றச்சாட்டை உருவாக்கி உள்ளார். நான் சிபிஐ விசாரணைக்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் முதலில் இந்தியர்களிடம் இருந்து நிலக்கரி மூலம் ரூ.13,000 கோடி ஊழல் செய்த அதானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுங்கள்’’ என கூறி உள்ளார்.
The post இந்தியாவில் இருந்தபோது மொய்த்ராவின் லாகின் ஐடி துபாயில் பயன்படுத்தப்பட்டது: பாஜ எம்பி துபே புதிய குற்றச்சாட்டு appeared first on Dinakaran.