×

ஒன்றிய அரசை எதிர்பார்க்க வேண்டாம் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசே நடத்த ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய அளவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சரை நான் பாராட்டுகிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை.அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசை எதிர்பார்க்க வேண்டாம் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசே நடத்த ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : union government ,Ramadoss ,Tamil Nadu government ,Chennai ,B.M.K. ,Ramdas ,Dinakaran ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...