×

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’: 1 கிலோ கனகாம்பரம் ரூ.1,800; பழங்கள், இலை விலை அதிகரிப்பு

சென்னை: ஆயுத பூஜை காரணமாக, கோயம்பேடு பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.1,200, ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி, கனகாம்பரம் ரூ.1,000, சாமந்தி ரூ.250, சம்பங்கி ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.140, சாக்லேட் ரோஸ் ரூ.200, அரளி பூ ரூ.400 விற்பனை செய்யப்பட்டு வந்தது.நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு, நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.1,000, ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.1,800, சாமந்தி ரூ.200, சம்பங்கி ரூ.220, அரளி பூ ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘வெளிமாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை பெய்து வருவதால் மல்லி, முல்லை, ஜாதிமல்லியின் விலை சற்று குறைந்துள்ளது. கனகாம்பரம், சாமந்தி, அரளி பூ விலை உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என தெரிவித்தார். பழ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ஆப்பிள், மாதுளை பழம் ரூ.300, கொய்யாபழம் ரூ.100, ஆரஞ்சு ரூ.60, சாத்துக்குடி ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டது.

* ஒரு கட்டு பெரிய வாழையிலை ரூ.1,300
கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கட்டு பெரிய வாழை இலை ரூ.1,300, சிறிய வாழை இலை ஒரு கட்டு ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஒரு தலைவாழை இலை ரூ.6க்கு விற்பனை ஆனது. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. எனவே, ‘‘வாழை இலையின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’: 1 கிலோ கனகாம்பரம் ரூ.1,800; பழங்கள், இலை விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Ayudha Puja ,Koyambedu ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...