×

சமந்தாவுக்கு டாக்டர் ஆலோசனை


மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சமந்தாவுக்கு இன்னும் அந்த நோயின் பாதிப்பு குறையவில்லை. எனவே, மேல்சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால், புதுப்படம் மற்றும் வெப்தொடர் வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் ெதாகையையும் திருப்பிக் கொடுத்து விட்டார். வெளிநாடு செல்வதற்கு முன்பு கோயில்களுக்குச் சென்று கடவுளிடம் வேண்டிக்கொண்ட அவர், தற்போது தனது உணவுப் பழக்கத்தை அடியோடு மாற்றியுள்ளார்.

மயோசிடிஸ் நோயை தீவிரப்படுத்தும் உணவு வகைகளான நட்ஸ், தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டை, பால் பொருட்கள், பிரெட் போன்றவற்றை அறவே தவிர்த்திருந்த அவர், தற்போது 16 மாதங்கள் கழித்து தனக்கு மிகவும் பிடித்த பிரெட்டை வெண்ணையுடன் சேர்த்து சாப்பிடுவதாக தனது சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். டாக்டரிடம் ஆலோசித்த பிறகே வெண்ணையுடன் கூடிய பிரெட்டை சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை விரைவில் குணமடைய நெட்டிசன்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளனர்.

The post சமந்தாவுக்கு டாக்டர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Samantha ,Dinakaran ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா