×

காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி காருடன் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது: ஐஜி பவானீஸ்வரி பேட்டி

தருமபுரி: காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி காருடன் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் இருந்து கோவைக்கு கொண்டு சென்ற தங்கம் காரிமங்கலம் அருகே கொள்ளையடிக்கப்பட்டது. தங்கம் கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள ஸ்ரீதீக்ஷா நகைக்கடை உரிமையாளர் பிரசன்னா செப்டம்பர்.28ல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு காருடன் 6 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி காருடன் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுஜித், சரத், பிரவீந்தாஸ், சிகாபுதீன், சைனு, அகில், சஜிஸ், அந்தோணி, சிரில் ஆகியோர் கைதாகினர்.

6 கிலோ தங்கம் கொள்ளை 15 பேருக்குதொடர்பு

தங்கம் கொள்ளையில் 15 பேர் ஈடுபட்டுள்ளனர்; 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கார்கள், 8 செல்போன்கள், 33 கிராம் எடையுள்ள தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.3.71 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணத்தை வைத்து கொள்ளையர்கள் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட 15 பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் சென்னையில் பறிமுதல்

காரில் கடத்திச் செல்லப்பட்ட கடத்தல் தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 6 பேரையும் தனிப்படை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

The post காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி காருடன் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது: ஐஜி பவானீஸ்வரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,IG ,Dharmapuri ,Bhavaneeswari ,
× RELATED கூட்டுறவு சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா